--- --:--:-- --

13 ஆண்டுகளாக குழந்தை இல்லாத விரக்தியால் கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு..!

10

சென்னை புளியந்தோப்பில் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட கணவன் மனைவியின் உடலை அழுகிய நிலையில் போலீசார் மீட்டனர். சென்னை புளியந்தோப்பின் சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு திருமணமாகி பதிமூன்றுகள் ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என கூறப்படுகிறது.

 

இதனால் ஏற்பட்ட விரக்தியில் தம்பதி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சக்திவேலின் வீடு உள்பக்கமாக கதவு மூடப்பட்டு துர்நாற்றம் வீசியுள்ளது.

 

அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற பொழுது இருவரும் இறந்து கிடந்தது தெரிய வந்தது. பின்னர் அழுகிய நிலையில் இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Right Menu Icon