பணி நியமனம் தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!
மத்திய பொதுத்துறை நிறுவனங்களை தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கான பணி வாய்ப்புகளை உறுதி செய்வதை வருகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
2021 – 2022 ல் பணியாளர் தேர்வு ஆணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டோரில் 4.5 சதவீதம் மட்டுமே தென் மண்டலத்தை சேர்ந்தவர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். தென் மண்டலத்தில் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது வேலை தேடும் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும், சமூக அரசியல் வட்டாரத்தில் கவலையையும் ஏற்படுத்தி இருப்பதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையங்களால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளையும் தமிழில் நடத்திடவும், தமிழகத்தில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்திடவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ரயில்வே நிறுவனங்களில் 20% இட ஒதுக்கீட்டின் கீழ் நேரடி நியமனத்தை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





