--- --:--:-- --

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தமிழ் சினிமா நடிகர் கைது..!

3

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் சினிமா நடிகரான ரூசோ என்பவரை கைது செய்த போலீசார் அவர் கணக்கில் இருந்த ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

 

தமிழகம் முழுவதும் 13 கிளைகளோடு இயங்கி வந்த ஆருத்ரா நிதி நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் வந்த நிலையில் பொருளாதாரக் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்த வழக்கில் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்ந்ததாக காஞ்சிபுரத்தை சேர்ந்த ரூசோ என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

 

மேலும் அவரின் வங்கி கணக்கில் இருந்த ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் பணம் முடக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon