--- --:--:-- --

நாடு முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்..!

2

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பேராலய அதிபர் தலைமையில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு திருப்பள்ளியில் கிறிஸ்துவ ஏசு பிறந்த செய்தி வாசிக்கப்பட்டது.

 

அப்போது குடிலில் பிறந்த இயேசு கிறிஸ்துவுக்கு பாதிரியார்கள் தீர்த்தம் அளித்து மகிழ்ந்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் ஆரத் தழுவையும் இனிப்பு வழங்கியும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

 

இந்த விழாவில் தமிழகம் மட்டும் இல்லாது கேரளா, ஆந்திரா உள்ள மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். உறவினர்களை சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon