திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கொன்ற காதலன்..!
தஞ்சாவூர் அருகே திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அடைக்கப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வாசுகி.
இவரும் அதே பகுதியை சேர்ந்த மாதவன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதில் வாசுகி கர்ப்பமான நிலையில் மாதவனிடம் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறில் வாசுகியை சமாதானம் செய்து வைப்பது போல் அழைத்த மாதவன், அவருடைய சகோதரன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து குளத்தில் மூழ்கடித்து வாசுகியை கொலை செய்துள்ளனர்.
இந்த வழக்கில் மாதவனும், அவரது சகோதரரும் கைது செய்யப்பட்ட நிலையில் மாதவனின் நண்பர் புண்ணியமூர்த்தி என்பவர் திருவையாறு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். விசாரணைக்காக திருச்சி மத்திய சிறையில் புண்ணியமூர்த்தி அடைக்கப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





