வெண்ணிலா கபடி குழு நடிகர் மாயி சுந்தர் திடீர் மரணம்..!
வெண்ணிலா கபடி குழு திரைப்பட நடிகர் மாயி சுந்தர்இன்று அதிகாலை 2.45 மணிக்கு உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார். இன்று அதிகாலை 2.45 மணியளவில் உடல் நலக் குறைவால் அவர் உயிர் இழந்தது திரை வட்டாரங்களில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
சொந்த ஊரான மன்னார்குடியில் மஞ்சள் காமாலை நோய்க்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாயி, துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் அவர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





