--- --:--:-- --

ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்தவர் கைது..!

2

லகத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவது தொடர் கதையாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் அருகே அரசு குளிர்சாதன பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த ஒரிசாவை சேர்ந்த அழகு நாயக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

 

பின்னர் அவரிடம் இருந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

 

அதேபோல் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் ஷேக் அப்துல்லா என்பவரை கைது செய்த காவலர்கள் அவரிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்ந்து திருப்பூர் பல்லடம் சாலையில் பதித்து வைத்திருந்த 274 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

 

Right Menu Icon