திருமணத்தை பதிவு செய்தால் புனிதம் கூடி விடாது : உயர் நீதிமன்றம்
விருப்பம் இல்லாமல் நடந்த திருமணத்தை பதிவு செய்தால் மட்டும் அதன் புனிதம் கூடி விடாது என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் திருமணத்தை பதிவு செய்யக்கூடாது என உத்தரவிட முடியாது என மறுத்துவிட்டது.
கோவையில் உள்ள தேவாலயத்தில் கடந்த அக்டோபர் மாதம் விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தை பதிவு செய்யக்கூடாது என பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிடக் கூறி மணப்பெண் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியன் திருமணம் என்பது நடந்து அதனை பதிவு செய்யாவிட்டாலும் அது செல்லதக்கது தான் என கூறினார். அந்த திருமணத்தை நீதிமன்றம் மூலமாகத்தான் ரத்து செய்ய முடியும் என்பதால் மனுதாரர் கூறியபடி எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.
மேலும் விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தை பதிவு செய்தால் மட்டும் அதன் புனிதம் கூடி விடாது என தெரிவித்த நீதிபதி திருமணத்தை செல்லாது என அறிவிக்க கோரி உரிமையியல் நீதிமன்றத்தில் மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





