--- --:--:-- --

வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் செய்த 3 பேர்..!

20

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.

 

விருகம்பாக்கம் அருகே சாலிகிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சிலர் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. தகவலின் பெயரில் விடுதியை கண்காணித்து வந்த போலீசாரிடம் மணிகண்டன் மற்றும் காஸ்லி உள்ளிட்ட மூன்று பேர் சிக்கி உள்ளனர்.

 

அவர்களிடம் நடத்திய விசாரணையில் விடுதியில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதியானது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஆறு செல்போன்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

 

இந்த சம்பவத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று பெண்களை மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon