தலைக்குப்புற கவிழ்ந்த லாரி..! இடிந்து விழுந்த பள்ளிவாசல்..!
கேரள மாநிலம் தாமரை சேரி கணவாய் சாலையில் சரக்கு லாரி ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. கேரள மாநிலம் தாமரை பகுதியில் மகாராஷ்டிராவில் இருந்து ஆரஞ்சு பழம் ஏற்றி வந்த லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்து பள்ளிவாசல் மீது விழுந்து விபத்திற்கு உள்ளானது.
இதில் பள்ளிவாசலின் ஒரு பகுதி முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இதில் ஓட்டுநர் சில காயங்களுடன் உயிர் தப்பினார்.





