கர்ப்பமாக இருப்பதை அறியாமலேயே நடு வானில் குழந்தை பெற்றெடுத்த அதிசயம்..!
தான் கர்ப்பமாக இருப்பதையே அறியாமல் பெண் ஒருவர் நடுவானில் விமானத்தில் அழகான பெண் தேவதையை பெற்றெடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பயணிகள் விமானம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது விமானத்திலிருந்த பெண்ணுக்கு திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. சக பயணி அவரை கழிவறைக்கு அழைத்து சென்றுள்ளார்.
விமானத்திலிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர் உதவியுடன் அந்த பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தான் கர்ப்பமாக இருந்ததை அறியாமல் அந்த பெண் விமானத்தில் குழந்தை பெற்றெடுத்தார்.
விமானம் தரையிறங்கியதும் உடனடியாக தாயும், சேயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் பிரசவத்தின் பொழுது தனக்கு பெரிதும் உதவிய மேக்சியின் பெயரை தன் குழந்தைக்கு சூட்டி மகிழ்ந்துள்ளார் அந்த பெண்மணி .





