--- --:--:-- --

திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் போராட்டம்..!

6

விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வுக்கு எதிராக நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

அதிமுக அமைப்பு செயலாளர் மணியன் உள்ளிட்டோர் திமுக அரசை கண்டித்து முழக்கமிட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 15 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

 

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் திமுக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதோடு துண்டு பிரசுரங்களையும் விநியோகித்தனர்.

 

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களிலும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலும், நாமக்கல் மாவட்டம் சிங்களாந்தபுரத்திலும் திமுக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

 

Right Menu Icon