முதலமைச்சராக பதவியேற்ற பின் மு.க.ஸ்டாலின் முதல் ரயில் பயணம்..!
முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பின் முதன்முறையாக ரயிலில் பயணிக்க இருக்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின். அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக வரும் எட்டாம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் தென்காசி செல்ல இருக்கிறார்.
முதலமைச்சராக பதவியேற்ற பின் முதன் முறையாக ரயிலில் பயணம் மேற்கொள்ள இருக்கும் முதலமைச்சர் ரயில் நிலையத்திலிருந்து தென்காசி புறப்பட உள்ளார்.
அங்கு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மதுரை வரும் முதல்வர் மதுரை மாநகராட்சி வளைவு மற்றும் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்த பின்னர் சென்னை திரும்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





