குழந்தைகளுக்கு பாலில் விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தந்தை..!
சென்னையில் இரண்டு குழந்தைகளுக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற தந்தையின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் விஜயகுமார்.
இவருக்கு கவிதா என்பவர் உடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் விஜயகுமார் அடிக்கடி மது அருந்திவிட்டு சண்டையிடுவதாக கூறி பிரிந்து சென்ற கவிதா இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
இதையடுத்து வாரத்தின் இறுதி நாட்களில் மட்டும் இரு குழந்தைகளையும் விஜயகுமார் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம் என தெரிகிறது. இதேபோல் இரண்டு குழந்தைகளையும் அழைத்து வந்த விஜயகுமார் குழந்தைகளுக்கு பாலில் விஷ மாத்திரை கலந்து கொடுத்து விட்டு தானம் கொடுத்துதாக கூறப்படுகிறது.
இதில் இரண்டு குழந்தைகளும் மயக்கமடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயகுமாரின் தந்தை மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





