--- --:--:-- --

டிசம்பர் 5ல் ஜெயலலிதா நினைவு தினம் அதிமுகவினருக்கு ஓபிஎஸ் அழைப்பு..!

10

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டுநினைவு நாளில் மெரினாவில் உள்ள நினைவிடம் நோக்கி நடைபெறும் ஊர்வலத்தில் ஆதரவாளர்கள் பங்கேற்குமாறு ஓபிஎஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் தலைமை கழகம் என்ற பெயரில் ஓபிஎஸ் தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

அதில் வரும் டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவு நாளை ஒட்டி சேப்பாக்கத்தில் இருந்து மெரினாவில் ஊர்வலம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தில் ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தியதும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

 

இந்த நிகழ்ச்சியில் ஆதரவாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்த வேண்டும் எனவும் ஓபிஎஸ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon