வீடு புகுந்து பெண்ணின் தலையில் பெட்ரோல் ஊற்றி கொள்ளை..!

சென்னையில் மகளிர் குழு தலைவி மீது பெட்ரோல் ஊற்றி பணத்தை கொள்ளை அடித்து சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். தேனாம்பேட்டையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு யோசித்து வருபவர் புனிதா.

 

மகளிர் குழு தலைவியாக இவர் தன் வீட்டில் பணத்தை எண்ணிக்கொண்டிருந்த பொழுது திடீரென வந்த முகமூடி அணிந்தபடி ஒருவர் பெட்ரோல் கேனுடன் வந்துள்ளார்.

 

அப்பொழுது புனிதாவின் தலையில் பெட்ரோலை ஊற்றிய அவர் தீ வைத்ததாக கூறி மிரட்டி பணத்தை பறித்து கொண்டு தப்பினார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த தேனாம்பேட்டை போலீசார் பணத்தை கொள்ளை அடித்து சென்ற நபரை தேடி வருகின்றனர்.