--- --:--:-- --

அதிமுக பொது குழு செல்லுமா? செல்லாதா? என உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை..!

10

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது. கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற அமர்வு பொதுக்குழு கூட்டத்தை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்குகளை அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்றத்தின் ஈபிஎஸ் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.

 

அதில் ஓபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை இபிஎஸ் தரப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon