சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
சென்னை அருகே 350 கிலோமீட்டர் அளவில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இன்று நள்ளிரவு தெற்கு ஆந்திரா, வட தமிழகம் புதுச்சேரி நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் கணிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்கிறது. நாளை காலை தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நெருங்கும் போது காற்றெடுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





