--- --:--:-- --

மழைக்கு முன் எச்சரிக்கையாக ஏரிகளில் இறையன்பு ஆய்வு..!

5

பள்ளிக்கரணை பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை நான்காவது முறையாக தலைமை செயலாளரின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் பொழுது சென்னை புறநகர் பகுதியான சோழிங்கநல்லூர் பகுதியில் பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், செம்மஞ்சேரி பகுதி அதிக அளவில் பாதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் மழை நீர் வடிகால் பணிகளை தமிழக தலைமை செயலாளரான இறையன்பு நான்காவது முறையாக இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த ஆய்வின் போது சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon