தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி பயணம்..!
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திடீரென விமான மூலம் புறப்பட்டு டெல்லிக்கு சென்றார். டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி யாரை சந்தித்து பேசுவார் என்ற விபரங்கள் வெளியாகவில்லை. ஆனாலும் மூத்த மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் திமுக போன்ற கட்சிகள் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் அவர் டெல்லி சென்று இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது. இன்றும், நாளையும் டெல்லியில் இருக்கும் ஆளுநர் ரவி நாளை இரவு சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





