--- --:--:-- --

சாலையில் சென்ற கார் மீது திடீரென விழுந்த கம்பம்..!

3

கேளம்பாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது சிக்னல் விளம்பர கம்பம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையடுத்த கேளம்பாக்கத்தில் சிக்னல் பொருத்தப்பட்டிருந்தது.

 

இந்த கம்பம் துருப்பிடித்து. மிகவும் மோசமாக இருந்த நிலையில் நேற்று திடீரென அங்கிருந்து விழுந்தது. அந்த வழியாக சென்ற கார் மீது சிக்னல் கம்பம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதில் காரின் கண்ணாடி உடைந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போலீசார் சிக்னலை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon