கர்ப்பிணி பெண் மீது ஏறி இறங்கிய பஸ் சக்கரம்..!
சென்னை மெரினா காமராஜர் சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து மோதிய விபத்தில் சிக்கி நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்தார். கடற்படை தளத்தில் பணிபுரிந்து வரும் ஆந்திராவை சேர்ந்த சிவா ரெட்டி தனது மனைவி லலிதாவுடன் திருவல்லிக்கேணியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை தனது மனைவியுடன் மெரினா கடற்கரைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தலைமை செயலகம் பிரதான சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இவர்களின் வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதில் பின்கிருக்கையில் அமர்ந்திருந்த கர்ப்பிணி லதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய பேருந்தை சிறை பிடித்து அடித்து நொறுக்கினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





