இறந்த நபர் சவப்பெட்டியில் இருந்து எழுந்து வந்த அதிர்ச்சி சம்பவம்..!

டன் தொல்லையால் இறந்துவிட்டதாக நாடகமாடிய தம்பதி சற்று நேரத்தில் மாட்டிக்கொண்ட சுவாரசிய சம்பவம் இந்தோனேஷியாவில் நிகழ்ந்துள்ளது. இந்தோனேஷியாவின் தெற்கில் தாங்கள் வாங்கிய கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க முடிவு செய்துள்ளனர்.

 

அதன்படி சவப்பெட்டியுடன் கூடிய ஆம்புலன்சை அழைத்தவர்கள் இறந்தவருடலை எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளனர். சிறிது நேரத்தில் கணவர் சவப்பெட்டிக்குள் படுத்துக்கொண்டார். மனைவி மருத்துவர்களிடம் இறப்பு சான்றிதழ் கேட்டுள்ளார்.

 

ஆனால் ஒரு கட்டத்தில் சவப்பெட்டியில் இருந்து அந்த நபர் எழுந்துள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் எதேச்சையாக வீடியோவாக எடுத்துள்ளார். அந்த தம்பதியின் திட்டம் குறித்து தெரியாதவர் இறந்த ஒருவர் உயிர் பிழைத்துவிட்டார் என இணையதளத்தில் அந்த காட்சியை வெளியிட்டு விட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.