கரூரில் வெறிநாய் துரத்தி துரத்தி கடித்ததில் எட்டு பேர் காயம்..!
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி பகுதிகளில் வெறி நாய் கடித்ததால் எட்டு பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காவிரி நகர் பகுதியில் சுற்று திரிந்த வெறி நாய் அந்த வழியே நடந்து சென்றவர்களையும் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களையும் துரத்தி துரத்தி கடித்துள்ளது.
தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபொழுது போதிய நிதி இல்லாததால் தங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என கூறினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





