--- --:--:-- --

விசவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழப்பு..!

6

கரூரில் கழிவு நீர் தொட்டிக்குள் சென்ட்ரிங் பிரிக்க இறங்கிய இரு கட்டிடத் தொழிலாளர்களும் அவர்களை காப்பாற்ற சென்ற மற்றொரு தொழிலாளியும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். காளியூரில் குணசேகரன் என்பவர் கட்டப்பட்டு வரும் புதிய வீட்டில் கழிவுநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் கழிவுநீர் தொட்டியில் போடப்பட்டிருந்த கான்கிரீட் பலகைகளை அகற்றும் பணியில் கட்டட தொழிலாளர்கள் மோகன்ராஜ் ராஜேஷ் ஆகியோர் ஈடுபட்டனர். இருவரும் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி கழிவுகளை அகற்றிக் கொண்டிருந்த பொழுது விஷவாயு தாக்கியுள்ளது.

 

அங்கிருந்த சிவகுமார் என்பவர் அவரை காப்பாற்ற கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கியுள்ளார். அப்பொழுது விஷவாயுத்தாக்கி மூன்று தொழிலாளர்களும் உயிரினத்தினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மூன்று உடல்களை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் கட்டட உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டார். அதில் புதிதாக கட்டப்பட்ட தொட்டியில் முழங்கால் அளவுக்கு தேங்கியிருந்த தண்ணீரில் சவுக்கு குச்சிகள் மூழ்கியதால் விஷவாயு உருவாகி இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon