--- --:--:-- --

கிணற்றில் தவறி விழுந்த ஒரு வயது குழந்தையை காப்பாற்ற சென்ற தாயும் பலி..!

7

சேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற முயன்ற பொழுது தாயும் சேயும் நீரில் மூழ்கி உகந்தனர். மாசிநாயக்கன்பட்டி பகுதியில் சேர்ந்த வினோத் என்பவரது மனைவி மீனா. இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் சுபஸ்ரீ என்ற மகள் உள்ளார்.

 

இந்த நிலையில் வினோத்தின் மனைவி மீனா தென்னந்தோப்பிற்கு நீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டர் ஆன் செய்ய சுபஸ்ரீ உடன் சென்றார். அப்பொழுது கிணற்றில் குழந்தை தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் பதறிய தாய் குழந்தையை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார். மீனாவுக்கு நீச்சல் தெரியாத நிலையில் தாயும் சேயும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

 

இது குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை காவல்துறையினர் தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் தாய் சேய் இருவரையும் சடலமாக மீட்டனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

இந்த சம்பவம் குறித்து சேலம் அம்மாபேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon