--- --:--:-- --

தேங்கியிருந்த மழை நீரில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு..!

10

சீர்காழி அருகே வாய்க்காலில் தவறு விழுந்த ஐந்து வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழி அடுத்த கிராமத்தில் மேலத்தெருவை சேர்ந்த ராமன் சங்கீதா தம்பதியினரின் மகள் ஹர்ஷிதா. அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்த வருகிறார்.

 

வீட்டிற்கு அருகே சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த பொழுது வீட்டின் பின்புறம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் வாய்க்காலில் தவறி விழுந்து நீரில் மூழ்கி சிறுமி உயிரிழந்தார்.

 

மகளை காணவில்லை என்று பெற்றோர் தேடிய பொழுது வாய்க்காலில் ஓரத்தில் அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon