கணவருடன் சேர்த்து வைக்குமாறு மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை..!
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்திற்கு கணவருடன் சேர்த்து வைக்குமாறு அவரது மனைவி காவல் ஆணையர் காலில் விழுந்து கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
ஜெகன், கல்பனா ஆகியோர் 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு ஜகன் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் திருமணமான அடுத்த நாளே அவர் தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் தனது கணவரை கண்டுபிடித்து தன்னுடன் சேர்த்து வைக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.





