--- --:--:-- --

காதலனுக்கு விஷம் கொடுத்ததாக காதலி மேல் அளிக்கப்பட்டுள்ள புகார்..!

7

கேரளாவில் தோழி கொடுத்த விஷம் கலந்த குளிர்பானத்தை குறித்து கல்லூரி மாணவன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது பரப்பரப்பு ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ். இவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

 

இவர் தினமும் கல்லூரிக்கு செல்லும் பொழுது ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில் அந்த பெண்ணுக்கு வீட்டில் வரன் பார்க்க ஆரம்பித்துள்ளனர். இதனிடையே கடந்த 17ஆம் தேதி தோழி அழைப்பை ஏற்று தனது நண்பர் உடன் தோழி வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

அப்பொழுது அந்த பெண் குளிர்பானம் கொடுத்ததாக கூறப்படுகிறது. குடித்த சற்று நேரத்தில் உடலில் மாற்றங்கள் தெரியவே உடனே அவர் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்தப் பெண் குளிர் பானத்தில் விஷம் கலந்து கொடுத்திருக்கலாம் என்று உறவினர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

 

Right Menu Icon