கருத்து கேட்கும் கூட்டத்தில் ஆசிரியர்கள் கேம் விளையாடிகொண்டிருந்த அவலம்..!
சேலத்தில் மாநில கல்வி கொள்கை குறித்து கருத்து கேட்கும் கூட்டத்தில் ஆசிரியர்கள் கேம் விளையாடிகொண்டிருந்த அவலம் நிகழ்த்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கேற்றார்.
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் பள்ளி, மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்பொழுது அதிகாரிகள் பேச விரும்பவில்லை.
ஆசிரியர்கள் அதனை கவனிக்காமல் தங்களுடைய மொபைல் போனில் facebook, whatsapp ஆகியவற்றை பார்த்துக் கொண்டிருந்தனர். மேலும் ஒரு சில ஆசிரியர்கள் மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த வீடியோ தற்பொழுது வைரல் ஆகிவிட்டது.





