மாணவனை சக மாணவர்கள் தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதி..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் நான்கு பேரும் தாக்கியது குறித்து புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தாக்குதலுக்குள்ளான மாணவனின் பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.
நாகர்கோயிலில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் அடித்து தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்த மாணவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். தனது மகன் சக மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.





