வெறிநாய் கடித்ததில் சிறுவர்கள் உட்பட 20 பேர் படுகாயம்..!
ஆண்டிபட்டி அருகே வெறிநாய் கடித்ததில் சிறுவர்கள் உட்பட 20 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். தேனி மாவட்டம் கொண்டநாயக்கன்பட்டியில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று திடீரென வெறிபிடித்து அந்த வழியாக செல்பவரை கடிக்க தொடங்கியது.
தெருக்களில் அங்குமிங்கும் ஓடி கண்ணில் கண்டவரை எல்லாம் கடிக்க தொடங்கியது. இதில் சிறுவர்கள் உட்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





