குஷ்பு குறித்து திமுக நிர்வாகி ஆபாசமாக பேசியதற்கு திமுக எம்பி கனிமொழி மன்னிப்பு கேட்பு..!
குஷ்பு குறித்து திமுக நிர்வாகி ஆபாசமாக பேசியதற்கு திமுக எம்பி கனிமொழி மன்னிப்பு கேட்டார். திமுக கூட்டத்தில் பேசிய நிர்வாகி ஒருவர் பாஜக நிர்வாகியான குஷ்பு குறித்து ஆபாசமாக பேசியதாக தெரிகிறது.
அதையடுத்து நடிகரும், பாஜக பிரமுகருமான குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்தார். இதற்கு திமுக எம்பி கனிமொழி மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் பெண்ணாகவும், மனிதநேயத்துடன் மன்னிப்பு கேட்பதாக குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





