பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த பொழுது ஓட்டுநருக்கு மாரடைப்பு..!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அரசு பேருந்து ஓட்டுனர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவத்தில் 34 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பொள்ளாச்சி ஜமீன் மெயில் சேர்ந்த மருதாச்சலம் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார்.
நேற்று வழக்கம்போல் பணிக்கு வந்தவர் தனக்குரிய பேருந்து 34 பயணிகளை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வந்துள்ளது.
மீன்கரை சாலை வழியாக செல்லும் பொழுது மருதாச்சலத்திற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து மயக்க நிலையில் பேருந்து அருகில் இருந்த ஒரு தடுப்பு சுவர் மீது மோதி நிறுத்தியுள்ளார். பின்னர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில் உயிரிழந்தார்.






