பட்டாசு வாங்கினாலும், வெடித்தாலும் அபராதம்..!
டெல்லியில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வாங்கினாலும், வெடித்தாலும் 200 ரூபாய் அபராதத்துடன் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
பட்டாசு தயாரிப்போர், விற்பனை செய்வோர் மற்றும் சேமித்து வைப்பதற்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதத்துடன் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடையை அமல்படுத்த 408 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கடந்த 16ஆம் தேதி வரை தடையை மீறியதால் எண்பத்தி எட்டு வழக்குகள் பதியப்பட்டு 2,917 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.





