--- --:--:-- --

மனைவியை அடித்து வீடியோ வெளியிட்ட கணவன்..!

2

திருவனந்தபுரத்தில் ரத்தம் வருமளவிற்கு மனைவியின் முகத்தில் அடித்து வீடியோவாக எடுத்து வெளியிட்ட கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த இவர் திடீரென்று மதுவுக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

 

வீட்டில் உள்ள கடன் சுமை காரணமாக மனைவி வேலைக்கு சென்று வந்துள்ளார். மனைவி வேலைக்கு செல்வதை விரும்பாதவர் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை முழு போதையில் வீட்டுக்கு வந்ததில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

 

மேலும் மனைவியின் முகத்தில் ரத்தம் வருமளவிற்கு அடித்து உதைத்துள்ளார். அதை வீடியோவாகவும் வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ வரவும் இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon