பள்ளியில் நச்சுவாயுக் கசிவு..! நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கம்..!
ஓசூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆயிரத்து 300 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வழக்கம்போல் செயல்பட தொடங்கிய நிலையில் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பறையில் உள்ள பகுதியில் நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் மாணவர்களுக்கு அடுத்தடுத்து மயக்கம், வாந்தி ஏற்பட்ட நிலையில் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சுமார் 250 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிலருக்கு ஆம்புலன்சில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.





