--- --:--:-- --

இரண்டு வயது குழந்தையின் மீது தொலைக்காட்சிப்பெட்டி விழுந்து உயிரிழப்பு..!

4

திருத்தணி அருகே வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தையின் மீது தொலைக்காட்சிப்பெட்டி விழுந்து பரிதாபமாக குழந்தை உயிரிழந்தது. சதாம் உசேன் என்பவரது 2 வயது ஆண் குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் வீட்டில் இருந்தவர்கள் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

அப்போது டிவி ஸ்டாண்ட்டை குழந்தை இழுத்த பொழுது எதிர்பாராத விதமாக டிவி குழந்தை மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

 

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

Right Menu Icon