--- --:--:-- --

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் திடீர் ஆலோசனை..!

10

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை பெரியகுளத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் திருச்சி மாவட்ட ஆதரவாளர்கள் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினர்.

 

அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் உட்கட்சிப் பூசல் தொடரும் நிலையில் கடந்த ஒரு மாதமாக ஓபிஎஸ்சை சந்திப்பதற்கு அவரது ஆதரவாளர்கள் யாரும் வராமல் இருந்தனர்.

 

இந்த நிலையில் திருச்சி நகரம் மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் அவரை திடீரென சந்தித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon