--- --:--:-- --

வீட்டு பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

10

சென்னை மதுரவாயலில் வீட்டு பால்கனியில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த 2 வயது குழந்தை உயிரிழந்தது. மதுரவாயலில் வீட்டு பால்கனியில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது தவறி விழுந்துள்ளது.

 

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையின் உயிர் பிரிந்தது. இரு தினங்களுக்கு முன் வீட்டு பால்கனியில் இருந்து 2 வயது பெண் குழந்தை தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon