ஆட்டோ மீது அதி வேகமாக வந்த கார் மோதி விபத்து..!
கடையம் அருகே ஆட்டோ மீது அதி வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஆட்டோ ஓட்டி வருபவர் முஸ்தபா. இவர் கடந்த 9ஆம் தேதி முதல் ஏற்பட்ட பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்த பொழுது எதிரே வேகமாக வந்த கார் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் முஸ்தபாவின் கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காரை ஓட்டி வந்த ஸ்டீபன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






