அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது அளிக்கப்பட்ட தீண்டாமை புகார்..!
விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது அளிக்கப்பட்ட தீண்டாமை புகார் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி நேரில் விசாரணை நடத்தினார். சிவகாசி அருகே பேராம்பள்ளி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியை ஜூலியட் மாணவர்களை சாதிப்பெயரை சொல்லி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுபற்றி மாணவர்கள் கடந்த மூன்றாம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க மாவட்ட கல்வி அதிகாரிக்கு ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
பேரா பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சென்ற மாவட்ட கல்வி அதிகாரி சாந்தி மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தினார். விசாரணை நிறைவடைந்த பிறகு ஆட்சியரிடம் அறிக்கை அளிக்க உள்ளதாக அவர் கூறினார்.





