புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு திமுக கண்டனம்..!
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று அந்த மாநில திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி மாநில திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அந்த கட்சியின் செயலாளர் அன்பழகன் அரசுக்கு நிகராக தமிழிசை தவறாக அரசாங்கம் நடத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு இருக்கும்பொழுது ஆளுநர் மக்களிடம் நேரடியாக புகார் கேட்பது ஏற்புடையது அல்ல என குற்றம்சாட்டினார்.





