பீட்சாவில் கிடந்த கண்ணாடி துண்டு..!
துரித உணவான பீட்சாவில் கண்ணாடி துண்டு கிடந்தது உணவுப் பிரியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் வசிக்கும் ஒரு நபர் ஆன்லைன் வாயிலாக டோமினோஸ் பகுதியில் பீட்சா ஆர்டர் செய்தார்.
பார்சலை ஆவலுடன் பிரித்து சாப்பிட முயன்ற பொழுது அதிர்ச்சி காத்திருந்தது. பீட்சாவில் கண்ணாடி துண்டு கிடந்தது. இதையடுத்து அவர் சமூக வலைதளங்களில் அந்த புகைப்படத்தை பதிவிட்டார்.
இது குறித்து எந்த பதிலும் தெரிவிக்காத நிலையில் மும்பை மாநகர போலீசார் சமூகவலைதளத்தில்தெரிவித்துள்ள நிலையில் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மைய பிரிவில் புகார் செய்யவும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் போலீஸில் புகார் செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.






