விஜய் தேவரகொண்டாவுடன் ரகசியமாக வெளிநாடு சென்ற ராஷ்மிகா?
நடிகை ராஷ்மிகா பற்றி காதல் கிசுகிசுக்கள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் அவர் காதலில் இருக்கிறார் என கூறப்பட்டாலும் அவர்கள் அதை இதுவரை உறுதியாக ஒப்புக்கொள்ளவில்லை.
பேட்டிகளில் இது பற்றி கேள்வி எழுப்பினாலும் அவர்கள் அது வெளிப்படையாக பதில் சொல்வதில்லை.இந்நிலையில் நேற்று ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் தனித்தனியாக விமான நிலையம் வந்த போட்டோக்கள் வெளியாகி இருக்கிறது.
அவர்கள் இருவரும் ஒன்றாக மாலத்தீவு செல்கிறார்கள் என கூறப்படுகிறது. அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகும் நிலையில், அவர்கள் ரகசிய டேட்டிங் செல்கிறார்களா என இணையத்தில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் ராஷ்மிகா வெளியிட்ட ஒரு போட்டோவும் தற்போது வைரல் ஆகி வருகிறது.






