4வது திருமணம் செய்து ஏமாற்றிய பெண்..!
பேஸ்புக் மூலம் பழகி மளிகை கடைக்காரரை காதல் திருமணம் செய்து 30 சவரன் தங்க நகைகள் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடிய இளம்பெண்ணையும் அவரது இரண்டாவது கணவரையும் போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்க புரத்தை சேர்ந்தவர் தீபக். மளிகை கடைக்காரர் ஆன இவர் ஃபேஸ்புக் மூலம் கவுசல்யா என்ற இளம்பெண்ணுடன் பழகி கடந்த மாதம் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு கௌசல்யா மற்றொரு நபருடன் பேசியதால் அதனை கண்டித்துள்ளார்.
இதனால் சில நாட்களுக்கு முன்பு கவுசல்யா வீட்டில் இருந்து 30 சவரன் நகைகள் மற்றும் இரண்டு லட்சம் ரூபாயை சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்தவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி கௌசல்யாவை கைது செய்தனர். ரகுவரன் கௌசல்யாவின் இரண்டாவது கணவர் என்பதும் சமூக வலைதளங்களின் மூலம் கௌசல்யா ஏமாற்றி 4வது திருமணம் செய்து இருந்தது தெரியவந்துள்ளது.






