--- --:--:-- --

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டல் ஊழியர்..!

4

வாணியம்பாடியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓட்டல் ஊழியரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த சையத் என்பவர் உணவகம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

 

இந்நிலையில் நேற்று அதே பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கிறார்.

 

அந்த பகுதி மக்கள் மற்றும் சிறுமியின் உறவினர்கள் சரமாரியாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon