ஆபாச வீடியோவை வைத்துக்கொண்டு மிரட்டி பணம் பறித்த நபர்..!
கன்னியாகுமரியில் ஆபாச வீடியோவை வைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜான் கென்னடி என்பவர் அதே பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரை ஆபாசமாக வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் அந்த வீடியோவை வைத்து பலமுறை அவரை மிரட்டி பணம் பறித்து வந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட நிலையில் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.



