--- --:--:-- --

ATM க்கு பிறந்த தேதியை பின் நம்பராக வைத்ததால் விபரீதம்..!

10

சென்னையில் பெண் ஒருவர் பிறந்த தேதியை பயன்படுத்தி அவரது வங்கிக் கணக்கில் இருந்து 50,000 ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த ரவி என்பவர் தனது உறவினரை பார்க்க சென்னை வந்துள்ளார்.

 

சென்னையில் தனது கைப்பையை தவற விட்ட நிலையில் ஏடிஎம் மூலமாக சுமார் 50 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சென்னை கோயம்பேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

 

இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் திருட்டு போனவரின் கைப்பையில் ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்டவையும் இருந்துள்ளது. இதனால் கொள்ளையர்கள் மிக எளிதில் கண்டுபிடித்து அவரது வங்கி கணக்கில் இருந்து பெரும் தொகையை திருடியது தெரிய வந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon