முதல்வரின் ஆந்திரப் பயணத்தில் வெளிப்படைத்தன்மை இல்லையா? – துரைமுருகன் கேள்வி
முதலமைச்சரின் ஆந்திரப் பயணத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். கோதாவரி–கிருஷ்ணா–காவிரி நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தால், அதற்கான வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதா என்றும், திட்டத்தின் சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கோதாவரி–காவிரி நதிநீர் இணைப்புத் திட்டம் தொடர்பாக பிரதமரைச் சந்தித்து கோரிக்கை வைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்றும் வினவியுள்ளார். இந்தச் சந்திப்பில் நீர்வளத்துறை செயலாளர் எங்கே இருந்தார் என்றும் கேள்வி எழுப்பியுள்ள துரைமுருகன், முதலமைச்சரின் ஆந்திரப் பயணம் தொடர்பான விவரங்களில் வெளிப்படைத்தன்மை அவசியம் எனத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




